
ஊழல்பேர்வழிகளை எதிர்த்துப் போராட பணஉதவி செய்யுங்கள் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் வரும் பிப்ரவரி-19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இதனால், பல்வேறு கட்சியினரும் தேர்தல் குறித்தும் தமிழக அரசு குறித்தும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், ‘நம்மீது திணிக்கப்பட்டிருக்கும் தரமற்ற அரசியலை மாற்றி, மக்கள்நலனை முன்னிறுத்தும் நேர்மையான அரசியலைச் செய்ய தீவிரமாகக் களத்தில் நிற்கிறோம். பகாசுர ஊழல்பேர்வழிகளை எதிர்த்துப் போராட பணஉதவி செய்யுங்களென உரிமையுடன் உங்களிடம் கேட்கிறேன்’ என பதிவிட்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க நன்கொடை கேட்டு வங்கி விவரத்தையும் இணைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.