தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி 10ஆம் தேதிக்கு மாற்றம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான 2வது பயிற்சி வரும் 10ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி 10ஆம் தேதிக்கு மாற்றம்
Published on
Updated on
1 min read

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான 2வது பயிற்சி வரும் 10ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 12,838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவனையினை கடந்த 26ஆம் தேதி தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. 
சென்னை மாநகராட்சியைத் தவிர, இதர மாவட்டங்களின் வாக்குச்சாவடிகளில் பணியமர்த்தப்படும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு வரும் 9ஆம் தேதி இரண்டாவது பயிற்சி அளித்திட அறிவுறுத்தி அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்கள்/மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தக்க அறிவுரைகள் ஆணையத்தால் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே சென்னை மாநகராட்சிக்கு வரும் 10ஆம் தேதி வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாவது பயிற்சியினை வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இதர அனைத்து மாவட்டங்களிலுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாவது பயிற்சி அளித்திட, ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட நாளான வரும் 9ஆம் தேதிக்குப் பதிலாக நிர்வாக காரணங்களை முன்னிட்டு வரும் 10ஆம் தேதி வியாழக்கிழமை நடத்திட இவ்வாணையத்தால் அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்கள்/மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தற்போது தக்க அறிவுரைகள் வங்கப்பட்டுள்ளன என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com