திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலுக்கு 1008 பால்குட ஊர்வலம்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலுக்கு 1008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலுக்கு 1008 பால்குட ஊர்வலம்
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலுக்கு 1008 பால்குட ஊர்வலம்
Published on
Updated on
1 min read

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலுக்கு 1008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் 1008 பால்குட பெருவிழா திங்கட்கிழமை வேதமலை குழு மற்றும் அகஸ்திய கிருபா அமைப்பினரின் சார்பில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

மலைமீதுள்ள வேதகிரீஸ்வரர் கோயிலை வலம் வந்து வேதகிரீஸ்வரரை கழுகு தொழும்  வேதகிரி பட்சி தீர்த்தம் என புகழப்படுவதும், 12 ஆண்டிற்கு ஒரு முறை சங்கு தீர்த்தக் குளத்தில் சங்கு பிறக்கும் பெருமை பெற்ற திருக்கழுக்குன்றம் திவ்ய சேத்திரம்.

சுயம்பு மூர்த்தியாக விளங்கும் வேதகிரீஸ்வரர் பெருமானுக்கு உலக நன்மைக்காகவும் கழுகு முனிவர்களின் தரிசனம் வேண்டியும் 1008 பால் குட ஊர்வலமும் 1008 பால் குடங்களால் அபிஷேகமும் நடைபெற்றது. 

பால்குட ஊர்வலம் தாழ கோயிலான பக்தவத்சலேஸ்வரர் கோயில் ஆமை மண்டப வளாகத்தில் பட்சிகள் மீண்டும் வருகை தர கூட்டு பிரார்த்தனை செய்து கோபூஜை நடத்தும் பால்குட புறப்பாடு வீதிகள் வழியாக வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலுக்கு சென்றடைந்தது. 

பால்குடம்  எடுத்து வந்தவர்கள் கொண்டு வந்த 1008 பால்குடங்களால் வேதகிரீஸ்வருக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் தீபாராதனையும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் குமரன் சக்திவேல் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் தேவஸ்தானம் அகஸ்திய கிருபா அகத்தியர் ஸ்ரீ அன்புச்செழியன் மற்றும் ஆன்மீக பக்தர்கள் செய்திருந்தனர். இவ்விழாவில் மணி தனசேகரன், கமலஹாசன், வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com