
ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக பிப்ரவரி 14ஆம் தேதி முதல் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக கரோனா பரவல் அதிகரித்தது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜன.6-ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், கடந்த 9-ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
இதையும் படிக்க- கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வுப் பணி: முதல்வர் தொடக்கிவைத்தார்
பின்னர் கரோனா பரவல் விகிதம் குறைந்து வருவதையடுத்து, இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் ஒருசில கரோனா கட்டுப்பாடுகள் இன்னும் அமலில் உள்ளன.
இந்த நிலையில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக பிப்ரவரி 14ஆம் தேதி முதல் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தலைமைச் செயலகத்தில் மருத்துவத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.