ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அய்யம்பேட்டை பேரூராட்சி திமுக வேட்பாளர் அனுசியா உயிரிழப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள அய்யம்பேட்டை பேரூராட்சியில் முழுவீச்சில் பிரசாரம் செய்து வந்த திமுக வேட்பாளர் வியாழக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தார்

News image
திமுக வேட்பாளர் அனுசியா
Updated On :17 பிப்ரவரி 2022, 8:47 am

DIN

பாபநாசம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள அய்யம்பேட்டை பேரூராட்சியில் முழுவீச்சில் பிரசாரம் செய்து வந்த திமுக வேட்பாளர் வியாழக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தார்.

அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9-ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதே பகுதி நேரு நகரைச் சேர்ந்த மூர்த்தி  மனைவி அனுசியா (56) திமுக சார்பில் போட்டியிட்டார். கடந்த 2 வாரமாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
 
இந்நிலையில் வியாழக்கிழமை மாலையுடன் பிரசாரம் முடிவடைவதால் அனுசியா காலையிலிருந்தே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

வீடு வீடாக நடந்து சென்று ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரித்த அவர் திடீரென அவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த ஆதரவாளர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவரை வரவழைத்து பரிசோதித்தனர். ஆனால் அனுசியா இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.

இதனால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அனுசியா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.