நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பிற்பகல் 3 மணி நிலவரப்படி 47.18% வாக்குகள் பதிவு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 47.18% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் என மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 2.79 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 22 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 47.18% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில், மாநகராட்சிகளில் 39.13%, நகராட்சிகளில் 53.49%, பேரூராட்சிகளில் 61.38% வாக்குகள் பதிவாகின.
மாவட்டத்தில் அதிகளவாக தருமபுரியில் 65.68%, குறைந்த அளவாக சென்னையில் 31.89% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேசமயம் மாநகராட்சிகளில் அதிகளவாக கரூர் மாநகராட்சியில் 60.28%, குறைந்த அளவாக சென்னையில் 31.89% வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 9 மணிக்கு 3.96%, 11 மணிக்கு 17.88% வாக்குகள், பிற்பகல் 1 மணிக்கு 23.42% வாக்குகள் சென்னையில் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.