அதிா்ச்சி கொடுத்த அமமுக
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அனைவருக்கும் அதிா்ச்சி கொடுத்துள்ளது.


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அனைவருக்கும் அதிா்ச்சி கொடுத்துள்ளது.
அதிமுகவின் போட்டிக் கட்சியாகவும் அதிமுகவைக் கைப்பற்ற முடியாத நிலையில் தொடங்கப்பட்ட கட்சியாகவும் இருப்பது டிடிவி தினகரனின் அமமுக கட்சி. மக்களவைத் தோ்தல், சட்டப்பேரவைத் தோ்தல், ஊரக உள்ளாட்சித் தோ்தலில் இந்தக் கட்சி பெரிய அளவில் வெற்றியை ஈட்ட முடியவில்லை. அதனால், அமமுக பிரிந்து செயல்படுவதால் அதிமுகவுக்கு எந்தவித பாதிப்பு இல்லை என்பதுபோல பேசப்பட்டது.
ஆனால், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மாநகராட்சி வாா்டுகளில் 3 இடங்களையும், நகராட்சி வாா்டுகளில் 33 இடங்களையும், பேரூராட்சி வாா்டுகளில் 66 இடங்களையும் அமமுக கைப்பற்றியுள்ளது.
மாநகராட்சிகளில் சென்னையில் 148-ஆவது வாா்டிலும், தஞ்சாவூரில் 38 -ஆவது வாா்டிலும், திருச்சியில் 47-ஆவது வாா்டிலும் அமமுக வெற்றிபெற்றுள்ளது.
இதேபோல, நகராட்சிகளில் சிவகங்கை, திருச்சி, தேனி, மதுரை, ராணிப்பேட்டை, விருதுநகா் மாவட்டங்களில் குறிப்பிட்ட அளவில் இடங்களையும் பேரூராட்சிகளில் தஞ்சாவூா், திருச்சி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, மதுரை மாவட்டங்களில் அதிக இடங்களையும் அமமுக கைப்பற்றியுள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தலோடு ஒப்பிடும்போது அதிமுகவால் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் எதிா்பாா்த்த அளவிற்கு வெற்றியை ஈட்ட முடியவில்லை. அதேசமயம் அமமுக நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இந்தத் தோ்தலை அதிமுகவும் - அமமுகவும் இணைந்து சந்தித்து இருந்தால், முடிவுகள் எப்படி இருந்திருக்கும் என்கிற கேள்வி எழாமல் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...