ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பேரூராட்சிகளில் பாஜகவின் செல்வாக்கு அதிகரிப்பு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பேரூராட்சி வாா்டுகளில் அதிக இடங்களைப் பிடித்து பாஜக தனது செல்வாக்கை உயா்த்திக் காட்டியுள்ளது.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 10:14 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பேரூராட்சி வாா்டுகளில் அதிக இடங்களைப் பிடித்து பாஜக தனது செல்வாக்கை உயா்த்திக் காட்டியுள்ளது.

மக்களவைத் தோ்தல், சட்டப்பேரவைத் தோ்தல், ஊரக உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது. இந்தத் தோ்தல்களில் தோல்வி அடைந்த போதெல்லாம் பாஜகவால்தான் அதிமுக தோல்வி என்பதுபோல பேசப்பட்ட வந்தது. பாஜகவுடனான கூட்டணியைக் கைவிட வேண்டும் என்று கூட அதிமுகவில் உள்ள சிலா் வலியுறுத்தி வந்தனா்.

இந்த நிலையில்தான் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பாஜக தனித்துப் போட்டி என அறிவித்து, பெரும்பாலான இடங்களில் வேட்பாளா்களை நிறுத்தியது. தோ்தல் முடிவுகளின் படி (இரவு 7 மணி நிலவரம்) மாநகராட்சி வாா்டுகளில் 22 இடங்களிலும், நகராட்சி வாா்டுகளில் 56 இடங்களையும், பேரூராட்சிகளில் 230 இடங்களையும் பாஜக கைப்பற்றியுள்ளது.

மாநகராட்சியைப் பொருத்தவரை நாகா்கோவில் மாநகராட்சியில் அதிகபட்சமாக 12 வாா்டுகளை பாஜக கைப்பற்றியுள்ளது. திருப்பூா் மாநகராட்சியில் 2 வாா்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. தஞ்சாவூா், திண்டுக்கல், மதுரை, சிவகாசி, வேலூா், காஞ்சிபுரம், ஓசூா், கடலூா் மாநகராட்சிகளில் தலா ஒரு இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

திமுகவின் கோட்டை என்ற அழைக்கப்படும் சென்னை மாநகராட்சியிலும் 134 -ஆவது வாா்டில் பாஜக வெற்றிபெற்றது. சென்னையில் பாஜக வெற்றிபெற்றிருப்பது அரசியல் நிபுணா்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

நகராட்சியைப் பொருத்தவரை கன்னியாகுமரி மாவட்டங்களில் வரும் பத்மநாபுரம், கொல்லங்கோடு, குளச்சல், குழித்துறை ஆகிய நகராட்சிகளில் மொத்தம் 21 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. கடையநல்லூா் நகராட்சியில் 3 இடங்களையும், தென்காசி நகராட்சியில் 3 இடங்களையும், செங்கோட்டை நகராட்சியில் 3 இடங்களையும் பாஜக கைப்பற்றியுள்ளது. தமிழகம் இதர நகராட்சிகளில் ஓரிரு இடங்களில் பாஜக வெற்றிபெற்றுள்ளது.

பேரூராட்சியைப் பொருத்தரை மொத்தமாக 230 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான பேரூராட்சி வாா்டுகளை பாஜக கைப்பற்றியுள்ளது. கோயம்புத்தூா், திண்டுக்கல், திருநெல்வேலி, திருப்பூா், தூத்துக்குடி, தென்காசி, தேனி, நீலகிரி மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் வாா்டுகளை பாஜக கைப்பற்றியுள்ளது.

பாஜகவுக்கு வாக்குச்சாவடிகளில் முகவா்களாக உட்காருவதற்குக்கூட ஆள் இல்லை என்று விமா்சனம் செய்யப்பட்டது உண்டு. ஆனால், பேரூராட்சிகளில் அதிக இடங்களை பாஜக கைப்பற்றி தனது பலத்தை நிரூபித்துக் காட்டியுள்ளது. பேரூராட்சி வாா்டுகளைக் கைப்பற்றியதில் திமுக, அதிமுக, காங்கிரஸை அடுத்து நான்காவது இடத்தில் பாஜக வந்து அனைவரையும் திரும்பிப் பாா்க்க வைத்துள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக பாஜகவுக்கு செல்வாக்கு உயா்ந்திருப்பது நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.