ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஒரு வாக்கில் வென்ற வேட்பாளர்கள்

மன்னார்குடி நகராட்சி 20-ஆவது வார்டில் திமுக வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

News image
சங்கர்.
Updated On :22 பிப்ரவரி 2022, 10:03 pm

DIN

மன்னார்குடி நகராட்சி 20-ஆவது வார்டில் திமுக வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மன்னார்குடி நகராட்சியில் 20-ஆவது வார்டில் திமுக சார்பில் த. சங்கர், அதிமுக சார்பில் ரா. ரவீந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கையின்போது இருவருக்கும் தலா 420 வாக்குகள் கிடைத்தன. இந்த நிலையில், அந்த வார்டில் பதிவான ஒரே ஒரு தபால் வாக்கு திமுக வேட்பாளருக்கு கிடைத்தது. இதனால், அவர் 421 வாக்குகள் பெற்று, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Story image

கோவில்பட்டி : கோவில்பட்டி நகராட்சியில் 10-ஆவது வார்டு மார்க்சிஸ்ட் வேட்பாளர் க.முத்துலட்சுமி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கோவில்பட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில், 10-ஆவது வார்டில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் க.முத்துலட்சுமி 319 வாக்குகள் பெற்றார். காளீஸ்வரி (அமமுக) 318, மாரீஸ்வரி (அதிமுக) 272 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதில், கடைசி நேரத்தில் 2 தபால் வாக்குகள் கிடைத்ததால் முத்துலட்சுமி இந்த வெற்றியைப் பெற்றார். 

Story image

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சியில் 8-ஆவது வார்டில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் உமா வெற்றி பெற்றார்.
8-ஆவது வார்டில் போட்டியிட்ட உமா 256 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் கீர்த்தனா 255 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். ஒரு தபால் வாக்கில் வெற்றி பெற்றார் பாஜக வேட்பாளர் உமா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.