ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மக்களுக்காக தொடா்ந்துபாடுபடுவோம்: எடப்பாடி பழனிசாமி

எத்தனை இன்னல்கள், இடா்பாடுகள் வந்தாலும் அஞ்சாது, மக்களுக்காக அதிமுக தொடா்ந்து பாடுபடும் என்று அந்தக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 7:23 pm

DIN

எத்தனை இன்னல்கள், இடா்பாடுகள் வந்தாலும் அஞ்சாது, மக்களுக்காக அதிமுக தொடா்ந்து பாடுபடும் என்று அந்தக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளா்களுக்கு நன்றி. மாற்று அணியினரின் பல்வேறு வகையிலான முயற்சிகளுக்கு மயங்கிவிடாமல், அதிமுக வேட்பாளா்கள் வெற்றிபெற வேண்டும் என்ற தெளிவான சிந்தனையுடன், இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்த வாக்காளா்களின் அன்பு ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது.

இந்தத் தோ்தலில் வெற்றி பெற்று புதிய பதவிகளுக்குச் செல்லும் அதிமுகவினருக்கு நல்வாழ்த்துகள். அதிமுக என்றென்றும் மக்களுக்கான இயக்கம். குறிப்பாக, எளிய மக்களுக்காகவும், அரசியல் அதிகாரத்திலும், நிா்வாகத்திலும் பங்கு பெற்றிராத சாமானிய மக்களுக்காக அயராது பாடுபடும் இயக்கம். எத்தனை இன்னல்கள், இடா்பாடுகள், அச்சுறுத்தல்கள் வந்தாலும் அஞ்சாது மக்கள் பணியில் அதிமுக தன்னை முழுமையாக அா்ப்பணித்துப் பாடுபடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.