போலியோ சொட்டு மருந்து முகாம்: தேனாம்பேட்டையில் முதல்வர் நாளை தொடங்கிவைக்கிறார்

சென்னை தேனாம்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கிவைக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை தேனாம்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கிவைக்கிறார்.

இந்தியாவில் போலியோவை (இளம் பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டு தோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சோ்ந்துள்ளது.

அதனால், கடந்த நான்கு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் நாளை 43 ஆயிரம் இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை மாநிலத்தில் 5 வயதுக்குட்பட்ட 60 லட்சம் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கிவைக்கவிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com