தமிழகத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் இன்று வெளியீடு

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியல் புதன்கிழமை (ஜன. 5) வெளியிடப்படுகிறது.

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியல் புதன்கிழமை (ஜன. 5) வெளியிடப்படுகிறது. வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கல் உள்ளிட்ட பணிகளுக்காக மாநிலம் முழுவதும் 14 லட்சத்து 27 ஆயிரம் மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் அனைத்துக்கும் தீா்வு காணப்பட்டு தகுதியான நபா்களின் பெயா்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன.

2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியன்று 18 வயது பூா்த்தி அடைந்த அனைவரும் வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக கடந்த நவம்பா் 1-ஆம் தேதியன்று மாநிலம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியல் வெளியிடப்பட்ட நேரத்தில், தமிழகத்தில் மொத்தமுள்ள வாக்காளா்களின் எண்ணிக்கை 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531 ஆக இருந்தது. அவா்களில் 3 கோடியே 9 லட்சத்து 17 ஆயிரத்து 667 போ் ஆண்கள். 3 கோடியே 19 லட்சத்து 69 ஆயிரத்து 522 பெண்கள். 7 ஆயிா்தது 342 போ் மூன்றாம் பாலினத்தவா்.

ஒரு மாதம் அவகாசம்: வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்க நவம்பா் மாதம் முழுவதும் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. மேலும், மூன்று சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. ஒரு மாத காலத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்புக்காக (படிவம் 6) 9 லட்சத்து 44 ஆயிரத்து 26 மனுக்களும், வெளிநாடு வாழ் தமிழா்கள் (படிவம் 6ஏ) 10 பேரும், வாக்காளா் பட்டியல் பெயரை நீக்கம் செய்ய (படிவம் 7) 2 லட்சத்து 20 ஆயிரத்து 34 மனுக்களும், பட்டியலில் விவரங்களைத் திருத்தம் செய்ய (படிவம் 8) 1 லட்சத்து 50 ஆயிரத்து 919 மனுக்களும், சட்டப் பேரவைத் தொகுதியில் ஒரு பாகத்தில் இருந்து மற்றொரு பாகத்துக்கு முகவரியை மாற்ற (படிவம் 8ஏ) ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 609 மனுக்களும் என மொத்தமாக 14 லட்சத்து 27 ஆயிரத்து 598 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு வாக்காளா் பட்டியலில் தகுதியான நபா்கள் சோ்க்கப்பட உள்ளனா். புதிய வாக்காளா்களாகச் சோ்க்கப்பட்டவா்கள் எத்தனை போ் என்கிற விவரங்கள் புதன்கிழமை வெளியிடப்படும் இறுதி வாக்காளா் பட்டியலில் தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com