காலமானார்: நெல்லை வசந்தன்

பிரபல ஜோதிடர் நெல்லை க.வசந்தன் உடல்நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை அதிகாலை காலமானார். 
நெல்லை க.வசந்தன்
நெல்லை க.வசந்தன்
Updated on
1 min read

பிரபல ஜோதிடர் நெல்லை க.வசந்தன் உடல்நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை அதிகாலை காலமானார். 

நெல்லை மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி என்ற ஊரைச் சேர்ந்த நெல்லை வசந்தன், ஜோதிடத்தில் மிகவும் புகழ்பெற்றவர். இவருடைய ஆய்வுகள், இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களிலும் போற்றப்பட்டவை.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே ஜாதகத்தை வைத்து துல்லியமாக கணித்துக் கூறியவர். வெளிநாடுகளில் இருந்தும் இவரை பலரும் தொடர்புகொண்டு வந்தனர்.

இயற்கை சீற்றம் குறித்தும் பலமுறை துல்லியமாகக் கணித்தவர். உலகம் முழுவதும் எண்ணற்ற அரசியல் தலைவர்கள், சினிமாத் துறையினர், தொழில் மேதைகள் என பலரும் இவருடைய ஆலோசனையைப் பெற்றுள்ளனர். 

நெல்லை வசந்தனின் பெற்றோர் கந்தசாமி – ஆவுடையம்மாள். இவருக்கு மனைவி மீனா, ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com