92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வாடகைக்கு வேளாண் இயந்திரங்கள், இ-வாடகை ஆன்லைன் செயலி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

விவசாயிகள் பயன்பெறும் வகையில், வாடகைக்கு வழங்கப்படும் வேளாண் இயந்திரங்களை, முன்பதிவு செய்ய இ-வாடகை ஆன்லைன் செயலியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

News image

விவசாயிகள் பயன்பெறும் வகையில், வாடகைக்கு வழங்கப்படும் வேளாண் இயந்திரங்களை, முன்பதிவு செய்ய இ-வாடகை ஆன்லைன் செயலியை தொடங்கி வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின்.

Updated On :8 ஜனவரி 2022, 9:59 am

DIN

சென்னை:  விவசாயிகள் பயன்பெறும் வகையில், வாடகைக்கு வழங்கப்படும் வேளாண் இயந்திரங்களை, முன்பதிவு செய்ய இ-வாடகை ஆன்லைன் செயலியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 
இன்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், வாடகைக்கு வழங்கப்படும் வேளாண் இயந்திரங்களை, விவசாயிகள் வீட்டிலிருந்தபடியே முன்பதிவு செய்ய இ-வாடகை ஆன்லைன் செயலியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர், சக்கரைத் துறை ஆணையர், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குநர், வேளாண்மைத் துறை இயக்குநர், வேளாண்மைப் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் மற்றும் உரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.