
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா (99) கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
வயோதிகம் காரணமாக தீவிர அரசியல் பணியிலிருந்து விலகி, குரோம்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வில் இருந்து வரும் என்.சங்கரய்யாவுக்கு சனிக்கிழமை திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.
அதைத் தொடா்ந்து, மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு கரோனா தொற்றுப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மருத்துவா்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனா். அவா் நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.