என்.சங்கரய்யா நலமுடன் உள்ளார்: கே.பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாக அக்கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தோழர் என்.சங்கரய்யாவுக்கு இரண்டு தினங்களாக லேசான காய்ச்சல் இருந்த காரணத்தினால் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இன்று மதியம் அவருக்கு அவருக்கு கரோனா பாசிட்டிவ் என தெரிய வந்தது. அவரை உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிக்க- மூத்த அரசியல் தலைவர் சங்கரய்யாவுக்கு கரோனா தொற்று
அவருக்கு ஆக்ஸிஜன் லெவல் மற்ற அனைத்தும் வழக்கம் போலவே உள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனை டீன் தேரணிராஜன் மற்றும் மருத்துவர்கள் குழு அவரை தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.
அவரை கவனித்துக் கொள்ள தனி மருத்துவ குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்புகொண்டு தெரிவித்தார். என்.சங்கரய்யா உடல் நலம் குறித்தும் கேட்டு அறிந்தார்.
அவருக்கு விவரங்களை தெரிவித்துள்ளேன் மேலும் சிறப்பு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தமைக்கு நன்றியும் தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.