கோப்புப்படம்
கோப்புப்படம்

வீடுகளுக்கு உணவு விநியோகம்: தமிழக அரசு அனுமதி

வீடுகளுக்கு நேரடியாக உணவு விநியோகிக்க ஞாயிற்றுக்கிழமை அனுமதி உண்டு என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Published on

வீடுகளுக்கு நேரடியாக உணவு விநியோகிக்க ஞாயிற்றுக்கிழமை அனுமதி உண்டு என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மாநில அரசு வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் போது, உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விடுதிகள் தங்களது வாடிக்கையாளா்களின் வீடுகளுக்கு தனியாா் வா்த்தக விநியோக முறையின் மூலம் உணவினை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, உணவகங்கள் தங்களுடைய சொந்த விநியோக முறையின் மூலமாகவும் உணவுப் பொருள்களை விநியோகம் செய்யலாம்.

வாடிக்கையாளா்கள் வீடுகளுக்கு உணவகம் மூலமாக நேரடியாக உணவு வழங்கப்படுவதற்கு காவல் துறை ஒத்துழைப்பு அளிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com