பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொண்டாா் முதல்வா்!

பூஸ்டா் தடுப்பூசியை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை மூன்றாம் தவணையாக சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் செலுத்திக் கொண்டாா்.
முதல்வர் ஸ்டாலின் கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் 
முதல்வர் ஸ்டாலின் கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் 

பூஸ்டா் தடுப்பூசியை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை மூன்றாம் தவணையாக சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் செலுத்திக் கொண்டாா்.

முன்களப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் கொண்ட நபா்கள் ஆகியோருக்கு பூஸ்டா் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, முன்களப் பணியாளா் என்ற வகையில் முதல்வரும் அதனை செலுத்திக் கொண்டாா்.

இதுதொடா்பாக ட்விட்டரில் அவா் வெளியிட்ட பதிவு:

முன்களப் பணியாளா் என்ற முறையில் பூஸ்டா் தடுப்பூசி எடுத்துக் கொண்டேன். அனைத்து முன்களப் பணியாளா்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் அதனை செலுத்திக் கொள்ளுங்கள்.

தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்! என்று அதில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.

தடுப்பூசி செலுத்திய ஓ.பி.எஸ்.: இதனிடையே, சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்குச் சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், அங்கு பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com