மைலம்பட்டி திருவள்ளுவர் நற்பணி மன்றத்தின் சார்பில்  திருவள்ளுவர் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தும் நிர்வாகிகள் 
மைலம்பட்டி திருவள்ளுவர் நற்பணி மன்றத்தின் சார்பில்  திருவள்ளுவர் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தும் நிர்வாகிகள் 

தேவூர் அருகே மைலம்பட்டியில் திருவள்ளுவர் தின விழா 

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் அருகே உள்ள மைலம்பட்டி திருவள்ளுவர் நற்பணி மன்றத்தின் சார்பில் திருவள்ளுவர் தினவிழா சனிக்கிழமை நடைபெற்றது. 
Published on


சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் அருகே உள்ள மைலம்பட்டி திருவள்ளுவர் நற்பணி மன்றத்தின் சார்பில் திருவள்ளுவர் தினவிழா சனிக்கிழமை நடைபெற்றது. 

திருவள்ளுவர் நற்பணி மன்றத்தின் தலைவர்  ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் அர்த்தனாரி  தலைமையில் நிர்வாகிகள்  மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினர். 

சத்துணவு ஊழியர் சங்கத்தின் சேலம் மாவட்டத்தலைவரும், திருவள்ளுவர் மன்றத்தின் செயலர் கே.தங்கவேலன் முன்னிலை வகித்தார். பொருளாளர்  ஆறுமணி, தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அய்யாசாமி,  மன்றத்தின் ஆலோசகர்  ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்  கிருஷ்ணன், ஆசிரியர் விஜயராஜன், நிர்வாகிகள் சுப்பிரமணியம், சண்முகம், அர்த்தநாரி,  குருசாமி உள்ளிட்ட பலர்  இதில் கலந்து கொண்டனர். 

முன்னதாக  திருவள்ளுவர் மன்ற நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் திருவள்ளுவர் சிலை முன்பு திருக்குறளை படித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com