கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

எம்.ஜி.ஆர். பிறந்த நாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:09 am

DIN

சென்னை: முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.

‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 105-வது பிறந்த நாள் விழாவை இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினர் அசன் மெளலானா, அரசு அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷய்யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.