
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று காலை 11.30 மணியளவில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து இதில் ஆலோசிக்கப்படவுள்ளது.
கரோனா அச்சுறுத்தலால் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது என்பது போன்ற முக்கிய முடிவுகள் இதில் எடுக்கப்படவுள்ளன.
ஆனால் ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்திமுடிக்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதன் பிறகு நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த இறுதிசெய்யப்பட்ட முடிவுகள் தெரியவரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.