சென்னை அண்ணா நகரில் புதிய தொழிலாளர் ஆணையர் அலுவலகம்: அமைச்சர் ஆய்வு

சென்னை அண்ணா நகர் தொழிலாளர் குடியிருப்பு வளாகத்தில் கட்டப்பட்டு வரும் புதிய தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வு செய்தார்.

சென்னை அண்ணா நகர் 6-வது அவென்யூவில் அமைந்துள்ள தொழிலாளர் குடியிருப்பு வளாகத்தில், 17 கோடி ரூபாய் செலவில் புதிய தொழிலாளர் ஆணையர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது.

தமிழக அரசால் கட்டப்பட்டு வரும் இந்த புதிய தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தின் கட்டுமானப் பணிகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வு செய்தார்.

அப்போது தரமான கட்டுமான பொருட்கள் உள்ளதா, கட்டுமானப் பணிகள் எந்த அளவில் நடைபெற்று வருகிறது என ஆய்வு மேற்கொண்டார். பின்பு இந்த கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு ஆணையிட்டார்.

மேலும் தற்போது தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகம், இந்தக் கட்டுமானப் பணிகள் முடிவடைந்தவுடன் சென்னை, அண்ணா நகர், 6வது அவென்யூவில் அமைந்துள்ள தொழிலாளர் குடியிருப்பு வளாகத்திற்கு மாற்றப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com