ஈரோடு, ஓசூரில் புதிய தொழிற்சாலைகளைத் திறந்துவைத்தார் முதல்வர்

ஈரோட்டில் விரிவாக்கப்பட்ட கால்நடைத் தீவன தொழிற்சாலை மற்றும் ஓசூரில் புதிய தாது உப்புக் கலவை தொழிற்சாலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தார்.
ஈரோடு, ஓசூரில் புதிய தொழிற்சாலைகளைத் திறந்துவைத்தார் முதல்வர்

ஈரோட்டில் விரிவாக்கப்பட்ட கால்நடைத் தீவன தொழிற்சாலை மற்றும் ஓசூரில் புதிய தாது உப்புக் கலவை தொழிற்சாலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தார்.

ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9316 தொடக்க பால் உற்பத்தியாளர்கள்
கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட அளவில் 25 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் மற்றும் மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது.

ஆவின் நிறுவனம் 4.26 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 39 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 26.66 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது.

கால்நடைத் தீவன தொழிற்சாலை

விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலமும் அதன் உபரி பொருள்கள் மூலமும் லாபம் ஈட்ட வேண்டியது அவசியம். இதனைக் கருத்தில் கொண்டு, ஈரோடு ஒன்றியத்தில் 1982 ஆம் ஆண்டு நாளொன்றுக்கு 100 மெட்ரிக் டன் உற்பத்திதிறன் கொண்ட கால்நடைத் தீவனத் தொழிற்சாலை நிறுவப்பட்டு தீவன உற்பத்தி தொடங்கப்பட்டது. பிறகு 150 மெட்ரிக் டன் அளவிற்கு உயர்த்தப்பட்டது. 

இந்நிலையில், ஆலையின் உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்கும் பொருட்டு கூடுதல் இயந்திரங்கள் நிறுவி, உற்பத்தி அளவினை நாளொன்றுக்கு 150 மெட்ரிக் டன்னிலிருந்து 300 மெட்ரிக் டன்னாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. 

இதற்காக தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 1 கோடியே 70 இலட்சம் ரூபாயும், மத்திய அரசின் பங்களிப்பாக 1 கோடியே 70 இலட்சம் ரூபாயும், என மொத்தம் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைத்தார்.

உப்புக் கலவை தொழிற்சாலை

ஈரோடு, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி மற்றும் தூத்துக்குடி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் நாளொன்றுக்கு தலா 12 மெட்ரிக் டன் உற்பத்திதிறன் கொண்ட தாது உப்புக் கலவை தொழிற்சாலைகள் மூலம் தாது உப்புக் கலவை தயாரிக்கப்பட்டு பால்
உற்பத்தியாளர்களுக்கு பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலமும் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது தாது உப்புக் கலவையின் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் ரூ.67.50 லட்சம் மற்றும் ஒன்றிய பங்களிப்பாக ரூ.67.50 லட்சம், என மொத்தம் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நாளொன்றுக்கு 12 மெட்ரிக் டன் உற்பத்திதிறன் கொண்ட தாது உப்புக் கலவை தொழிற்சாலை நிறுவப்பட்டது. இதனையும்  முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com