
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட சாலைகளை வருவாய் துறையினர் அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.
மானாமதுரையில் சிப்காட் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கே.கே.பள்ளம் வருவாய் பிரிவில் உடைகுளம் கண்மாயின் குறுக்கே ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைக்கப்படுவதாக மானாமதுரை வட்டாட்சியர் தமிழரசனுக்கு புகார் வந்தது.
இதையடுத்து சாலை அமைக்கப்பட்ட பகுதியில் வருவாய்துறையினரால் புல தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கண்மாய் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குடியிருப்புகளுக்கு சாலை அமைக்கப்படுவது உறுதியானது.
இதையும் படிக்க | ரூ.35,000 சம்பளத்தில் இந்து அறநிலையத் துறையில் வேலை
இதையடுத்து ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு சாலை அகற்றப்பட்டது.
மேலும் இப்பகுதியில் ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த சாலையும் அகற்றப்பட்டது.
ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கையின்போது மானாமதுரை வட்டாட்சியர் தமிழரசன், மண்டல துணை வட்டாட்சியர், சிப்காட் காவல் சார்பு ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.