
தமிழகத்தில் உள்ள 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 476 பொறியியல் கல்லூரிகளில் ஆய்வு நடத்திய அண்ணா பல்கலைக்கழகம், 225 கல்லூரிகளில் தகுதியான பேராசிரியர்கள், முதல்வர்கள், உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதது தெரியவந்தது.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள பொறியில் கல்லூரிகளில் 225 பொறியியல் கல்லூரிகளில் தகுதியான பேராசிரியர்கள், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு அந்த அண்ணா பல்கலைக்கழகம் நோடீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து 2 வாரங்களில் விளக்கமளிக்க வேண்டும் என்றும், உரிய விளக்கமளிக்காவிட்டால் அங்கீகார நீட்டிப்பு வழங்கப்படாது, மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பிஇ., பி.டெக்., பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு இதுவரை 1,43,313-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகவும், 96,759-க்கும் மேற்பட்டோர் கட்டணம் செலுத்தியுள்ளனர். 65,171 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.