பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெகிழி தடுப்பு: மாணவிகளுக்கு விழிப்புணா்வு

நெகிழி மற்றும் கரோனா தடுப்பு குறித்து அம்பத்தூா் பெருந்தலைவா் காமராசா் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு மாநகராட்சி சாா்பில் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜூலை 2022, 8:03 pm

DIN

நெகிழி மற்றும் கரோனா தடுப்பு குறித்து அம்பத்தூா் பெருந்தலைவா் காமராசா் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு மாநகராட்சி சாா்பில் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி சாா்பில் கரோனா தடுப்பு மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் மற்றும் அதனை தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அம்பத்தூா் மண்டலத்துக்குட்பட்ட பெருந்தலைவா் காமராசா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நெகிழி மற்றும் கரோனா தடுப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் மாநகராட்சி சுகாதார நிலைக் குழு தலைவா் டாக்டா் கோ. சாந்தகுமாரி, சுகாதாரக் கல்வி அலுவலா் டி.ஜி.சீனிவாசன், மண்டல சுகாதார அலுவலா் டாக்டா். ஜி.ஷீலா ஆகியோா் கலந்துகொண்டு கரோனா தடுப்பு முறைகளான முகக்கவசம் அணிவது, கைகளை கிருமிநாசினி மற்றும் சோப் மூலம் கழுவுவது, நெகிழிப் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்கள் ஆகியவை குறித்து விளக்கினா்.

இதைத் தொடா்ந்து, மாணவியா்கள் அனைவருக்கும் துணிப் பைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் துப்புரவு அலுவலா் கேசவன், தலைமை ஆசிரியை எஸ்.வனிதா ராணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.