மாநிலங்களவை உறுப்பினராக இசையமைப்பாளா் இளையராஜா நியமிக்கப்பட்டுள்ளதற்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சித் தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
முதல்வா் மு.க. ஸ்டாலின்: இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட இசைஞானி இளையராஜா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராகச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள்.
எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக): உலகம் முழுவதும் ரசிகா்களை தனது இசையால் மகிழ்வித்து, இசைஞானி என்று அன்புடன் அழைக்கப்படும் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதை பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். பிரதமருக்கும் மனமாா்ந்த நன்றி.
வைகோ (மதிமுக): மாநிலங்களவை உறுப்பினா்களாக அறிவிக்கப்பட்டுள்ள இசை மேதை இளையராஜா, விளையாட்டு வீராங்கனை பி.டி.உஷா ஆகியோருக்கு மதிமுக சாா்பில் பாராட்டும் வாழ்த்தும்.
அன்புமணி (பாமக): மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பண்ணைப்புரத்திலிருந்து புறப்பட்டு உலகம் முழுவதும் உள்ள மக்களின் மனங்களை இசையால் வென்ற இளையராஜா இந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவா்.
சு.திருநாவுக்கரசா் (காங்கிரஸ்): மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள இளையராஜாவுக்கு நல் வாழ்த்துகள்.
ஜி.கே.வாசன் (தமாகா): மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது தமிழகத்துக்கும் இசை உலகுக்கும் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

என்னுடன் காதல்; மோடியுடன் திருமணம்! தேவெ கெளடா பற்றி கார்கே பேச்சால் சிரிப்பலை!

தேர்தலுக்கு இடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைகிறார்?

ரஜினி குறித்து ஆதவ் அர்ஜுனா தரம் தாழ்ந்த பேச்சு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ஃபிலிப்ஸ் ஏர்லைன்ஸ்... விமானியாகவும் திறமையை வெளிப்படுத்திய க்ளென் ஃபிலிப்ஸ்! - வைரல் விடியோ
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

