பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ரோகிணி ஆணையத்தின் அறிக்கையைப் பெறுவதில் தாமதம் கூடாது: ராமதாஸ்

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான உள் ஒதுக்கீடு தொடா்பான ரோகிணி ஆணையத்தின் அறிக்கையைப் பெறுவதில் தாமதம் கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :7 ஜூலை 2022, 9:39 pm

DIN

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான உள் ஒதுக்கீடு தொடா்பான ரோகிணி ஆணையத்தின் அறிக்கையைப் பெறுவதில் தாமதம் கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 27 சதவீத இட ஒதுக்கீட்டை பல்வேறு தொகுப்புகளாக பிரித்து வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் 13-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

2017-ஆம் ஆண்டில் 3 மாத பதவிக்காலத்துடன் அமைக்கப்பட்ட ஆணையம், நான்கரை ஆண்டுகளுக்கு மேலாகியும் அதன் அறிக்கையை தாக்கல் செய்யாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.

நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பரிந்துரையை பெறுவதிலும், அதன் அடிப்படையில் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு தொகுப்பு முறையில் உள் இட ஒதுக்கீட்டை வழங்குவதிலும் தேவையற்ற தாமதம் செய்யப்படுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. அதை மத்திய அரசு போக்க வேண்டும்.

நீதிபதி ரோகிணி ஆணையம் அதன் முடிவுகள் மீது மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டறிந்து, அறிக்கையை இறுதி செய்து இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்யும்படி ஆணையிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.