அருப்புக்கோட்டை ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவிலில் இன்று  மாலை உலக நன்மை வேண்டி சிறப்பு சங்கல்ப வழிபாடு மற்றும் தியானம் நடைபெற்றன.
வியழக்கிழமை மாலை வழிபாட்டு நிறைவில் முழு அலங்காரத்தில் ஸ்ரீசீரடி சாய்பாபா.
வியழக்கிழமை மாலை வழிபாட்டு நிறைவில் முழு அலங்காரத்தில் ஸ்ரீசீரடி சாய்பாபா.

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவிலில் இன்று (வியாழக்கிழமை) மாலை உலக நன்மை வேண்டி சிறப்பு சங்கல்ப வழிபாடு மற்றும் தியானம் நடைபெற்றன.

அருப்புக்கோட்டை ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவிலில் இன்று மாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது பாபாவிற்கு, பஞ்ச தீபமும், ஏகதீபமும் என மாறிமாறி ஆரத்தி நடைபெற்றது. பின்னர் தீப, தூப ஆரத்தி நடைபெற்றதும் நைவேத்திய அர்ப்பணிப்பும் ஆரத்தியும் நடைபெற்றன. பிறகு அருள்மிகு பாபா முழு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். அதைத்தொடர்ந்து உலக நன்மை வேண்டி சங்கல்ப வழிபாடும், மூன்று நிமிட தியானமும், சாஸ்டாங்க நமஸ்கார நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சுமார் 1000-க்கு மேற்பட்ட பக்தர்கள் நேரில் கலந்து கொண்ட நிலையில், பக்தர்கள் அனைவருக்கும் இனிப்புடன் கூடிய அன்னப்பிரசாதமும், மலர்ப்பிரசாதமும் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com