பக்ரீத்: சேலத்தில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி சேலத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
சேலத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்
சேலத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்

சேலம்:  பக்ரீத் பண்டிகையையொட்டி சேலத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

கரோனா  தொற்றுலிருந்து உலகம் மீண்டு வரவும் மூன்றாவது அலை தொற்று பரவாமல் இருக்க சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.

இறைத்தூதர்களின் ஒருவரான இப்ராஹிம் நபி அவர்களின் தியாகத்தை நினைவூட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அரபியா மாதம் 
துல்ஹஜ் பத்தாம் நாள் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது
இன்று தமிழகம் உட்பட நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள ஜாமியா மசூதியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் 
புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை மேற்கொண்டனர்.

இதில் ஒவ்வொருவரும் சமூக இடைவெளி கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து தொழுகை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஈகைத் திருநாள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். 

தற்பொழுது நாடு முழுவதும் கரோனா  நோய் தொற்று முழுவதும் விடுபட்டு நாட்டு மக்கள் நலம் பெற வேண்டும், மேலும், மூன்றாவது அலை வரும் என்று மருத்துவர்கள் கூறி வரும் நிலையில், இந்த நோய்த்தொற்று முழுவதும் நீங்கிட சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இதேபோல், சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் உள்ள முக்கிய மசூதிகளில் இன்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும், இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே பக்ரீத் திருநாளையொட்டி சிறப்புத்தொழுகையில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com