மாதம் ரூ.1,000 நிதியுதவி பெற 3.58 லட்சம் மாணவிகள் விண்ணப்பம்!

தமிழகம் முழுவதும் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி மேம்பாட்டு உறுதித் திட்டத்தில் மாதம் ரூ.1,000 பெற 3.58 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
மாதம் ரூ.1,000 நிதியுதவி பெற 3.58 லட்சம் மாணவிகள் விண்ணப்பம்!

தமிழகம் முழுவதும் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி மேம்பாட்டு உறுதித் திட்டத்தில் மாதம் ரூ.1,000 பெற 3.58 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி மேம்பாட்டு உறுதித் திட்டம் மூலம், பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க 12 ஆம் வகுப்பு முடித்த அரசுப் பள்ளி மாணவியர்கள் கல்லூரியில் சேர்ந்து அவர்களின் படிப்பு முடியும் வரை அவர்களது வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,000 நேரடியாக செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி,மாதம் ரூ.1000 பெரும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஜூன் 30 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை 10 ஆம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கா கால அவகாசம் நீட்டித்து உத்தரவிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி மேம்பாட்டு உறுதித் திட்டத்தில் மாதம் ரூ.1,000 பெற தமிழகம் முழுவதிலும் இருந்து 3,58,304 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com