
அதிமுக தொண்டர்களிடையே நிகழ்ந்த கலவரங்களுக்கு இடையே, தடையை உடைத்து அதிமுக அலுவலுகத்தில் நுழைந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஏற்படுத்தியிருந்த தடையை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் உடைத்தெறிந்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகம் புறப்பட்டு சென்றுகொண்டிருந்த நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.
இதையும் படிக்க | அதிமுக பொதுக்குழுவை நடத்த அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம்
தலைக்கவசம் அணிந்துகொண்டு ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில், ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது.
அருகில் இருந்த வாகனங்களை அடித்து நொறுக்குவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
மோதலை தடுக்கும் நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.