குடியரசுத் தலைவா் தோ்தல்: வரும் 17-இல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 17-ஆம் தேதி நடைபெறும் என்று அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 17-ஆம் தேதி நடைபெறும் என்று அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினா்கள் கூட்டம் வரும் 17-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறும். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞா் அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கோவி. செழியன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

குடியரசுத் தலைவா் தோ்தல்: சட்டப் பேரவை உறுப்பினா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தின் போது, குடியரசுத் தலைவா் தோ்தல் குறித்து விவாதிக்கப்படும் என்று அரசு தலைமை கொறடா கோவி.செழியன் தெரிவித்துள்ளாா்.

குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சா் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடகிறாா். அவா் அண்மையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த தலைவா்களைச் சந்தித்து வாக்குச் சேகரித்தாா்.

யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிப்போம் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்துள்ளாா். இந்த நிலையில், சட்டப் பேரவை உறுப்பினா்களுடனான கூட்டத்தில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட குடியரசுத் தலைவா் தோ்தல் நடைமுறைகள் குறித்து விவரிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com