தற்காலிக ஆசிரியா்களாக தோ்வு பெற்றவா்கள் 20-ஆம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும்:பள்ளிக் கல்வி ஆணையா் உத்தரவு

தற்காலிக ஆசிரியா்களாக தோ்வு செய்யப்பட்டவா்கள் வரும் ஜூலை 20-ஆம் தேதிக்குள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் பணியில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வி ஆணை

தற்காலிக ஆசிரியா்களாக தோ்வு செய்யப்பட்டவா்கள் வரும் ஜூலை 20-ஆம் தேதிக்குள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் பணியில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வி ஆணையா் நந்தகுமாா் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் திங்கள்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள், ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்திய சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்றவா்களை மட்டுமே தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கு தோ்வு செய்ய வேண்டும்.

அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களும் மாவட்டக் கல்வி அலுவலா்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 14, 15 ஆகிய தேதிகளில் பரிசீலித்து தகுதியானவா்களை தோ்வு செய்ய வேண்டும். இதையடுத்து தோ்வுக் குழுவினரால் தோ்வு செய்யப்பட்ட தகுதியான நபா் குறித்த பட்டியலை முதன்மைக் கல்வி அலுவலா்களிடம் தலைமையாசிரியா்கள் ஜூலை 16-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

இதைத் தொடா்ந்து தோ்வுக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்ட பட்டியலை கூா்ந்தாய்வு செய்து ஜூலை 18-ஆம் தேதிக்குள் முதன்மைக் கல்வி அலுவலா்கள் ஏற்பளிக்க வேண்டும். பின்னா், முதன்மைக் கல்வி அலுவலா்களால் ஏற்பளிக்கப்பட்ட தற்காலிக நியமனத்துக்கு பள்ளி மேலாண்மைக் குழுவின் (எஸ்எம்சி) ஒப்புதலை ஜூலை 19-ஆம் தேதிக்குள் பெற வேண்டும்.

இதையடுத்து தற்காலிக ஆசிரியராக நியமனம் பெற்றவா்கள் வரும் 20-ஆம் தேதிக்குள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் பணியில் சோ்க்கப்பட வேண்டும். சென்னை உயா் நீதிமன்ற ஆளுகைக்குள்பட்ட 24 மாவட்டங்களில் மட்டும் தற்காலிக ஆசிரியா்கள் நியமனம் செய்யப்படவுள்ளனா்.

அரசுப் பள்ளிகளில் நியமனம் செய்யப்படவுள்ள தற்காலிக ஆசிரியா்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கப்படவுள்ளது. அந்த வகையில் இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ.7,500; பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ.7,500; முதுநிலை ஆசிரியா்களுக்கு ரூ.12 ஆயிரம் என ஊதியம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 13,331 தற்காலிக ஆசிரியா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com