'கூடுதல் பேருந்து வேண்டும்' - திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியல்

திருப்பத்தூர் அருகே கூடுதலாக இன்னொரு பேருந்து வேண்டும் என பேருந்தை சிறைப்பிடித்து பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
'கூடுதல் பேருந்து வேண்டும்' - திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியல்

திருப்பத்தூர் அருகே கூடுதலாக இன்னொரு பேருந்து வேண்டும் என பேருந்தை சிறைப்பிடித்து பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அனேரி பகுதியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்வதற்கு கூடுதலாக இன்னொரு பேருந்தை எங்கள் பகுதிக்குவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் பகுதியில் ராமகிருஷ்ணா கான்வென்ட், அரசு பூங்கா உயர்நிலைப்பள்ளி, ஸ்ரீ மீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில்  திருப்பத்தூர் அடுத்த விநாயகபுரம், ராஜமங்கலம், அனேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 

இந்நிலையில் பள்ளி மாணவிகள் கூறும்போது, பள்ளிக்குச் செல்லும் காலை நேரம் மற்றும் வீடு திரும்பும் மாலை நேரத்தில் பள்ளிக்குப் போகும்போதும் வருகின்றபோதும் ஒரே ஒரு பேருந்து மட்டும் எங்கள் பகுதிக்கு வந்து செல்வதால் பேருந்துக்குள் நிற்க இடம் இல்லாமல் படிக்கட்டுகளில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 

இதன் காரணமாக படிக்கட்டுகளில் பயணம் செய்யும்போது மாணவர்கள் இரண்டு, மூன்று முறை கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். இது போன்ற விபத்துகளினால் உயிரிழப்பு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது.

எனவே, எங்கள் பகுதியில் பள்ளிக்கு வந்து செல்ல கூடுதலாக இன்னொரு பேருந்தை விட வேண்டும். ஏற்கனவே ஒரு பேருந்து 7.45 மணிக்கு விநாயகபுரத்தில் கிளம்பி 8.45 மணிக்கு எங்கள் பகுதிக்கு வந்து சேருகிறது. 8.15 மணிக்கு இன்னொரு பேருந்தை விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியலை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து அலுவலர் மற்றும் திருப்பத்தூர் கிராமிய காவல் உதவி ஆய்வாளர் அகிலன் ஆகியோர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் அடிப்படையில் மாணவ, மாணவிகள் பேருந்தில் ஏறிச்  சென்றனர்.

மேலும், அப்போது சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் பேருந்தில் இடமில்லாமல் போனதால் பள்ளிக்குச் செல்லாமல் திரும்பி வீட்டிற்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com