எது தாழ்த்தப்பட்ட சாதி? - பெரியார் பல்கலைக்கழக தேர்வின் சர்ச்சைக்குரிய கேள்வியால் பரபரப்பு!

பெரியார் பல்கலைக்கழக முதுகலை வரலாற்று பாடப் பிரிவுக்கான தேர்வில் எது தாழ்த்தப்பட்ட சாதி? என்ற சர்ச்சைக்குரிய கேள்வியால் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
எது தாழ்த்தப்பட்ட சாதி? - பெரியார் பல்கலைக்கழக தேர்வின் சர்ச்சைக்குரிய கேள்வியால் பரபரப்பு!
Published on
Updated on
1 min read

பெரியார் பல்கலைக்கழக முதுகலை வரலாற்று பாடப் பிரிவுக்கான தேர்வில் எது தாழ்த்தப்பட்ட சாதி? என்ற சர்ச்சைக்குரிய கேள்வியால் தமிழகம் முழுவதும் மாணவர்கள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தற்போது சர்ச்சைக்குரிய பல்கலைக்கழகமாக செயல்பட்டு வருகிறது. நிரந்தர பதிவாளர் நிரந்தர தேர்வு கட்டுப்பட்டாளர் மற்றும் நிரந்திர துறை தலைவர்கள் யாரும் இல்லாததால் பொறுப்பு பதவிகளில் தற்போது நியமனம் நடைபெற்று வருகிறது .

இதனால் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு ஊக்கமளிக்கும் வகையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முதுகலை வரலாற்று பாடப் பிரிவுக்கான தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது

தமிழகத்தில் மிகவும் தாழ்ந்தபட்ட சாதி என்னவென்று கேட்கப்பட்ட கேள்வியால் மாணவர்கள் அதிர்ச்சடைந்தனர்.

தற்போது திமுக அரசு சாதி இல்லா சமுதாயத்தை உருவாக்குவோம், திராவிட மாடல், சமூக நீதி என்று பேசி வரும் நிலையில் அதனை செயல்படுத்தும் பல்கலைக்கழகத் தேர்வு கேள்வித்தாள்களில் இதுபோன்ற கேள்விகள் இடம்பெற்ற சம்பவம் தேர்வு எழுத வந்த மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும், சமூக ஆர்வலர்களிட பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பெரியார் என்ற பெயரில் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இதுபோன்ற அலட்சியமான நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேள்வித்தாள் தயாரித்த பேராசிரியர் மீதும் அதற்கு பரிந்துரை செய்த பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com