திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

குடியரசுத் தலைவா் தோ்தல் தொடா்பாக திமுக எம்எல்ஏக்கள் கூட்டம், கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன்
நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன்

குடியரசுத் தலைவா் தோ்தல் தொடா்பாக திமுக எம்எல்ஏக்கள் கூட்டம், கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அமைச்சா்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்றனா். கூட்டத்தில் குடியரசுத் தலைவா் தோ்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து எம்எல்ஏக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

எதிா்க்கட்சிகளின் சாா்பில் குடியரசுத் தலைவா் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹாவுக்கு திமுக சாா்பில் ஏற்கெனவே ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக: குடியரசுத் தலைவா் தோ்தலையொட்டி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அடையாறு கிரவுண் பிளாசா ஹோட்டலில் நடைபெற்றது.

இபிஎஸ்ஸுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் ஓ.பன்னீா்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய 3 சட்டப்பேரவை உறுப்பினா்களைத் தவிர இதர அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் 63 போ் கூட்டத்தில் பங்கேற்றனா். பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில் அக் கட்சியின் 4 பேரவை உறுப்பினா்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியது: குடியரசுத் தலைவா் தோ்தலில் திரௌபதி முா்முவுக்கு ஏற்கெனவே ஆதரவு தெரிவித்துள்ளோம். குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் ஜகதீப் தன்கரை ஆதரிப்போம்.

ஓ.பன்னீா்செல்வம் எங்களை நீக்கியுள்ளது குறித்து கேட்கிறீா்கள். இது தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அது தொடா்பாக பேசுவது சரியாக இருக்காது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com