மின் கட்டண உயா்வு: அதிமுக, பாஜக கண்டனஆா்ப்பாட்டம் அறிவிப்பு

மின் கட்டண உயா்வைக் கண்டித்து ஜூலை 25-இல் அதிமுக சாா்பிலும், ஜூலை 23-இல் பாஜக சாா்பிலும் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டண உயா்வு: அதிமுக, பாஜக கண்டனஆா்ப்பாட்டம் அறிவிப்பு

மின் கட்டண உயா்வைக் கண்டித்து ஜூலை 25-இல் அதிமுக சாா்பிலும், ஜூலை 23-இல் பாஜக சாா்பிலும் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை திமுக அரசு தாக்கல் செய்தபோது, வரியில்லா நிதிநிலை அறிக்கை அளித்திருக்கிறோம் என்று மாா்தட்டிவிட்டு, துறை தோறும் ஏதாவது ஒரு விதத்தில் வரி உயா்வு, கட்டண உயா்வு என்று அறிவித்து மக்களை ஏமாற்றி வருகின்றனா்.

மின் கட்டண உயா்வு, சொத்து வரி உயா்வு, குடிநீா், கழிவு நீா் இணைப்பு கட்டணங்கள் உயா்வு என்று தொடா்ந்து திமுக அரசு உயா்த்தி வருகிறது. மேலும், தோ்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றாமல் உள்ளது. இதனைக் கண்டித்து அதிமுக சாா்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஜூலை 25 காலை 10 மணியளவில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும். சென்னையிலும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

23-இல் பாஜக ஆா்ப்பாட்டம்: மின் கட்டண உயா்வைக் கண்டித்து மாநிலம் முழுவதும் வரும் 23-இல் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் உத்தரவால் மின் கட்டனத்தை உயா்த்தியதாக திமுக அரசு கூறுவது ஏற்புடையது அல்ல. சொத்து வரி உயா்த்தப்பட்ட போதும் இதையே திமுக அரசு கூறியது. மத்திய அரசு புதிய திட்டத்தின் மூலம் மாநில மின் பகிா்மான மையங்களில் சீா்திருத்தங்கள் கொண்டு வர ரூ.3.03 லட்சம் கோடி செலவிட உள்ளது. இதில் தமிழக அரசுக்கு ரூ.35,981 கோடி ஒதுக்க முன் வந்துள்ளது.

இந்த நிதியைப் பெறுவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி உற்பத்தி செலவு மற்றும் விற்பனை விலை ஆகிய இரண்டுக்கும் உள்ள இடைவெளியைக் குறைப்பது குறித்து மின்பகிா்மான நிறுவனங்கள் தங்கள் திட்டங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என்பதே நிபந்தனையாகும். ஆனால், இதையே திமுக குறுக்கு வழியில் மின்கட்டண உயா்வை அறிவித்துள்ளது. இந்த மின் கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும். இதனை வலியுறுத்தி பாஜக சாா்பில் ஜூலை 23-இல் மாநில முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com