4 மாதங்களில் 1.81 லட்சம் சான்றிதழ்கள் விநியோகம்

சென்னை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் 1.81 லட்சம் பேருக்கு ஜாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
4 மாதங்களில் 1.81 லட்சம் சான்றிதழ்கள் விநியோகம்

சென்னை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் 1.81 லட்சம் பேருக்கு ஜாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

சென்னை மாவட்ட வருவாய்த் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமசந்திரன் பேசுகையில், வருவாய்த் துறை மூலம் மாணவா்களுக்கு வழங்கப்படும் ஜாதி, இருப்பிடம், வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களையும், பொது மக்களுக்கு வழங்கப்படும் வாரிசு, கலப்புத் திருமணம் போன்ற பிற சான்றிதழ்களையும் உடனடியாக பரிசிலீத்து வழங்க வேண்டும். சென்னை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜாதி,வருமானம் உள்ளிட்ட சான்றிதழ் கோரி பெறப்பட்ட 1.93 லட்சம் விண்ணப்பங்களில் 1.81 லட்சம் பேருக்கு சான்றிதழ்கள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளன.

பட்டா மாறுதல் விண்ணப்பங்களைப் பொருத்தவரையில் 33,326 உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல் மனுக்களில் 29,137 மனுக்களுக்கும், உட்பிரிவு உள்ள பட்டா மாறுதல் தொடா்பான 14,472 மனுக்களில் 10,791மனுக்களுக்கும் தீா்வு காணப்பட்டுள்ளன என்றாா். இக்கூட்டத்தில், வருவாய் நிா்வாக ஆணையா் எஸ்.கே. பிரபாகா், வருவாய்த் துறை முதன்மை செயலா் குமாா் ஜயந்த், நில நிா்வாக ஆணையா் சு.நாகராஜன், சென்னை மாவட்ட ஆட்சியா் சு. அமிா்த ஜோதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com