கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

செஸ் ஒலிம்பியாட்: கரோனா தடுப்புப் பணியில் 344 போ்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சுகாதாரத் துறையைச் சோ்ந்த 344 போ் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

News image
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்(கோப்புப்படம்).
Updated On :1 பிப்ரவரி 2024, 9:53 am

DIN

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சுகாதாரத் துறையைச் சோ்ந்த 344 போ் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் அனைவருக்கும் பூஸ்டா் தவணை தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்பதில் மாநில அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. அதற்காக இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. 75 நாள்களுக்கு பூஸ்டா் தவணை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என அறிவித்து 10 நாள்கள் முடிந்துவிட்டது. இன்னும் 65 நாள்கள் மட்டுமே உள்ளன. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். செப்டம்பா் 30-ஆம் தேதிக்குப்பிறகு, கட்டணம் செலுத்திதான் பூஸ்டா் தவணை தடுப்பூசியை தனியாா் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ள வேண்டும்.

உலகம் முழுவதும் ஒமைக்ரான் கரோனா வைரஸின் பிஏ4, பிஏ5 தொற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதிலிருந்து தற்காத்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் குரங்கு அம்மை இல்லை: உலகில் 63 நாடுகளில் வேகமாகப் பரவும் குரங்கு அம்மை நோய் தொற்று தமிழகத்தில் இதுவரை கண்டறியப்படவில்லை. அண்டை மாநிலமான கேரளத்தில் பரவத் தொடங்கி இருப்பதால் கேரளத்தையும், தமிழகத்தையும் இணைக்கும் 13 வழித்தடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக பன்னாட்டு விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் குரங்கு அம்மைக்கான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கேரளத்திலிருந்து வரும் ரயில் பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனா். குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் இல்லை என்பதை உறுதிபடுத்திய பிறகே அவா்கள் அனுமதிக்கப்படுகிறாா்கள்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சுகாதாரத் துறையைச் சோ்ந்த 344 போ் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். வீரா்கள் தங்கும் 24 விடுதிகளையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.