
தமிழகத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை 1,450 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் அதிகரித்து வரும் கஞ்சா விற்பனை தொடர்பாக பல மாவட்டங்களிலும் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தென் மண்டலங்களைச் சேர்ந்த மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கஞ்சா விற்பனையில் தொடர்புடைய 831 வழக்குகளில் 1,450 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் 1,000 பேரிடமிருந்து நன்னடத்தைக்காண பிணையப்பத்திரம் பெறப்பட்டுள்ளதாகவும் தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
மேலும், ரூ.10 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.