கனியாமூர் கலவரத்தில் பள்ளியின் கட்டடத்தை இடித்த மணிஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தது தொடா்பாக கடந்த 17ஆம் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக 302 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களை விடியோ ஆதாரங்களை வைத்து கைது செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், கலவரத்தின் போது பள்ளியில் கட்டடத்தை இடித்த மணிஷ் என்பவரை இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, பள்ளி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காவல் துறை வாகனத்திற்கு தீ வைத்ததாக நிதீஷ் வசந்த் என்பவரை நேற்று இரவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.