
ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து அஸ்திர தேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நடைபெற்றது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கோயில் கடலில் அதிகாலை முதலே ஏராளமானோர் புனித நீராடியும், தங்கள் முன்னோர்களுக்கு புரோகிதர் முன்னிலையில் தர்ப்பணம் செய்தும் வழிபட்டனர். இதனால் திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.