அகமதாபாத் புறப்பட்டார் பிரதமர் மோடி
சென்னை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி அகமதாபாத் புறப்பட்டு சென்றுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
சென்னை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி அகமதாபாத் புறப்பட்டு சென்றுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் வழியனுப்பி வைத்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா் அரங்கில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னையின் அற்புதமான வரவேற்பால் மகிழ்ந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 உயர்வு
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகின்றன. இதன் தொடக்கவிழா விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா். இதில் பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகளும், தமிழர்களின் பெருமையை வெளிப்படுத்தும் விளக்கக் காட்சிப் படமும் பார்வையாளர்களை கவர்ந்தது .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...