
சென்னை: ஆகஸ்ட் 1-ல் நடக்க உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பழனிசாமி தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் பன்னீர் செல்வம் தரப்பிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பதுரை ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்குகிறது. வருகிற 2023 மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க: தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு
இந்நிலையில், சென்னையில் ஆகஸ்ட் 1 - ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.