யுடியூபிடம் கேட்கப்படும் முதன்மையான 10 கேள்விகள் என்ன தெரியுமா?   

அனைத்து வயதினரும், தரப்பினரும் அறிந்த, அறியக் கூடிய மற்றும் தேடக்கூடிய ஒரு அத்தியாவசிய தளமாக மாறியுள்ளது தான் யுடியூப். 
யுடியூபிடம் கேட்கப்படும் முதன்மையான 10 கேள்விகள் என்ன தெரியுமா?   



அனைத்து வயதினர் மற்றும் தரப்பினரும் அறிந்த, அறியக் கூடிய மற்றும் தேடக்கூடிய ஒரு அத்தியாவசிய தளமாக மாறியுள்ளது தான் யுடியூப். 

இன்று அனைத்து சந்தேகங்களுக்கும் விடை காண தேடப்படும் தளமாக இருந்து வருவது யுடியூப். 

அந்த யுடியூப் குறித்த சந்தேகங்களை யாரிடம் கேட்டால் சரியாக இருக்கும் என்ற கவலையைப் போக்கும் விதமாக யுடியூப் பதிலளித்துள்ளது. 

அதாவது படைப்பாளர்களின் கேள்விகளுக்கும் யுடியூபில் பதில்கள் உள்ளன. அந்த வகையில் படைப்பாளர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் விரைவாகப் பெறும் வகையில், கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் உதவி மையக் கட்டுரைகள் மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகளுடன் கூடிய முதன்மையான பொதுவான பத்து கேள்விகளைத் தொகுத்து யுடியூப் வெளியிட்டுள்ளது. 

முதன்மையான பத்து முக்கியமான கேள்விகளைப் பார்ப்போம். 

1. யுடியூப் உருவாக்குவது எப்படி? (How do I start creating on YouTube?)

2. எனது சேனலை எவ்வாறு வளர்ப்பது? (How do I grow my channel?)

3. எனது சேனலில் நான் எவ்வாறு திருத்தங்களைச் செய்வது? (How do I make edits to my channel?)

4. எனது வீடியோக்களை நான் எவ்வாறு விளம்பரப்படுத்துவது? (How do I promote my videos?)

5. ட்ரெண்டிங் வீடியோக்கள் எப்படி நிகழ்கின்றன? (How do Trending videos happen?)

6. அல்காரிதம் எவ்வாறு செயல்படுகிறது? (How does the algorithm work?)

7. யுடியூபில் நான் எப்படி பணம் சம்பாதிப்பது? (How do I make money on YouTube?)

8. பதிப்புரிமை எதிர்ப்பை எவ்வாறு சரிசெய்வது? (How do I fix a copyright strike?)

9. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட சேனலை எவ்வாறு சரிசெய்வது? (How do I fix a demonetized channel?)

10. ஹேக் செய்யப்பட்ட கணக்கை எவ்வாறு சரிசெய்வது? (How do I fix a hacked account?)

மேற்கண்ட முதன்மையான பத்து கேள்விகளுக்கான விடைகளை காண https://www.youtube.com/creators/top-questions/ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com