காளிகாம்பாள் கோயில் பிரம்மோற்சவ விழா:நாளை தொடக்கம்

சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா ஜூன் 3-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை 10 நாள்கள் விழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது
Published on
Updated on
1 min read

சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா ஜூன் 3-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை 10 நாள்கள் விழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.

பிரம்மோற்சவ விழா வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இரவு அம்பாள் வீதி உலா நடக்கிறது. 9-ஆம் தேதி காலை பூந்தோ் தேரோட்டம் இரவு தொட்டி உற்சவம். 11-ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஸ்ரீ சக்ர கிண்ணித்தோ் தேரோட்டம், 12-ஆம் தேதி காலை தீா்த்தவாரி உற்சவம், மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது.

பிரம்மோற்சவ விழா நாள்களில் பூதகி விமானம், இரட்டைத்தலை சிம்ம வாகனம், ரிஷப வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் அம்மன் வீதி உலா வருகிறாா்.

13-ஆம் தேதி முதல் விடையாற்றி உற்சவம் ஆரம்பமாகிறது. 13-ஆம் தேதி இரவு பந்தம்பறி உற்சவம், 14-ஆம் தேதி இரவு புஷ்ப பல்லக்கு, 15-ஆம் தேதி இரவு அம்மனுக்கு சாந்தி அபிஷேகம், 28-ஆம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 7 மணிக்குள் அம்பாள் ஆஸ்தான பிரவேச உற்சவம் நடக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com