
பஞ்சாபி பாடகர் சித்து மூஸேவாலா கொல்லப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் வைத்த அரசியல் செய்யக்கூடாது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மூலேவாலா அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பஞ்சாபில் என்ன சம்பவங்கள் நிகழ்ந்தாலும், அதைச் சுற்றி அரசியல் இருக்கக்கூடாது. சித்து மூஸ்வாலா கொல்லப்பட்டது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது.
"பஞ்சாப் முதல்வர் தங்களால் இயன்றவரை முயற்சிப்பதாக ஏற்கனவே கூறியுள்ளார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார்" என்று தில்லியின் ரோகினி பகுதிக்கு வந்த கேஜரிவால் இதை கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.