கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழ்நாட்டில் 44 காவல்துறை அதிகாரிகள் மாற்றம்: தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்

தமிழ்நாடு முழுவதும் 44 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Published on


தமிழ்நாடு முழுவதும் 44 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தாம்பரம் காவல் ஆணையராக இருந்த டிஜிபி ரவி சில நாள்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்ற நிலையில், தற்போது தமிழ்நாடு போலீஸ் அகாதமி இயக்குநராக உள்ள அமல்ராஜை தாம்பரம் காவல் ஆணையராக நியமித்து உள்துறை கூடுதல் செயலாளர் பிரபாகரன் இன்று அறிவித்துள்ளார். 

அமல்ராஜ் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். நாகர்கோவிலில் பள்ளிப் படிப்பை முடித்த பின்னர்  திருச்சியில் பட்டப்படிப்பை முடித்தார். 1996 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்தவர். ஐபிஎஸ் அதிகாரியான பின்னர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ மற்றும் முனைவர் பட்டம் பெற்றார். துப்பாக்கி சுடுதல் போட்டியில் பல பதக்கங்களை பெற்றுள்ளார்.

சேலம் மற்றும் கோவையில் ஆணையராக இருந்த போது சிசிடிவி கட்டுப்பாட்டு அறையை செயல்படுத்தினார். இதனால் 40 சதவிகிதம் குற்றங்கள் அந்த நகரங்களில் குறைந்தது. 

கோவை மற்றும் சென்னையில் காவல் அருங்காட்சியகத்தை அமல்ராஜ் அறிவுரையின் படி ஏற்படுத்தப்பட்டது. சிறப்பாக பணியாற்றியமைக்காக குடியரசுத் தலைவர் பதக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். 

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதோடு மட்டுமல்லாமல் காவல் துறையினருக்கு வெற்றி தரும் மேலாண்மைப் பண்புகள், வெற்றியாளர்களின் வெற்றிப் படிகள், வெல்ல நினைத்தால் வெல்லலாம், சிறகுகள் விரித்திடு, போராடக் கற்றுக்கொள் உள்ளிட்ட 5 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

கோவை காவல் ஆணையராக பாலகிருஷ்ணன், நெல்லை காவல் ஆணையராக அவினாஷ்குமார் நியனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com