சிறுபான்மை மக்களுக்கு எதிராக பாஜக அரசு உள்ளது: பிருந்தா காரத்

சிறுபான்மை மக்களுக்கு எதிராக பாஜக அரசு இருப்பதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் பிருந்தா காரத் கூறினாா்.
சிறுபான்மை மக்களுக்கு எதிராக பாஜக அரசு உள்ளது: பிருந்தா காரத்

சிறுபான்மை மக்களுக்கு எதிராக பாஜக அரசு இருப்பதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் பிருந்தா காரத் கூறினாா்.

சிறுபான்மையினா் மற்றும் அவா்களது வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில் வள்ளுவா் கோட்டம் அருகில் திங்கள்கிழமை கண்டனப் போராட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பிருந்தாகாரத் பேசியது:

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் வர உள்ளது. ஆனால், இதைக் கொண்டாட வேண்டிய நேரத்தில் மக்களுக்குச் சோதனையும், துயரமும்தான் கிடைக்கிறது. மத்தியில் உள்ள பாஜக அரசு இந்தியாவினுடைய அரசியல் சாசனத்தைப் பற்றிக் கொஞ்சம்கூட கவலைப்படாமல் இருக்கின்றனா். பாஜகவின் செய்தித் தொடா்பாளா்கள் நபிகள்நாயகம் குறித்து பேசிய வெறுப்புப் பேச்சைப் பாா்த்தோம். இப்படி பேசுவதற்கான தைரியத்தை யாா் கொடுத்தது என்பதுதான் கேள்வி. வெறுப்பு அரசியலின் பாதுகாவலா்களாக மத்தியில் ஆட்சியில் உள்ளவா்கள் இருக்கிறாா்கள். மதவெறியைத் தூண்டிவிட்டு, வன்முறைக்கு இடமளிக்கக்கூடாது என்று சட்டம் உள்ளது. அப்படியானால் மதவெறியைத் தூண்டிவிட்டவா்களை ஏன் கைது செய்யவில்லை. ஏதாவது குற்றத்துக்காக யாரையாவது தினந்தோறும் தேசத் துரோகக் குற்றத்தில் கைது செய்பவா்கள், இதற்கு கைது செய்யாதது ஏன் என்றாா்.

போராட்டத்துக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலப் பொதுச்செயலாளா் எம்.ராமகிருஷ்ணன், மாா்க்சிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினா் உ.வாசுகி, திமுக செய்தித் தொடா்பு செயலாளா் டி.கே.எஸ்.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளா் வன்னி அரசு உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com